Wednesday, May 31, 2017

குறுந்தொகை #1

குறுந்தொகை #1 எளிய வடிவில்
.
.
செங்குத்து மலைமேலே 
செண்பகமே உனைத்தேடி
செங்காந்தள் மலரோடு
உன்நினைவில் அலைந்தோடி
முன்புன்னை சந்தித்த 
முக்கூடல் மலைமேலே
பெண்ணுன்னை காணாமல் 
நின்றேனே சிலைபோலே
எங்கேயென் காந்தமவள்
இங்கே நான் காந்தளுடன்
சேர்த்திடுவாய் ஊரில் சேதி
உரைத்திடுவேன் நேரில் மீதி
.
செஞ்சிவப்பு களம்கண்ட 
செந்தூர அம்பெடுத்து
நஞ்சுண்ட பகைவரை 
கோபத்தில் கொன்றழித்து
செம்மண் தோய்த்த
தந்தமொடு யானையும்
செம்பின் சேர்த்த
தங்கமொடு வளையும்
கூடியே கமழும் 
குமரனின் குன்றில்
குவிந்தே கிடக்கும் 
ரத்தமாய் காந்தள்
இறைந்து கிடக்கு 
பணமும் பரிசும்
விரைந்து எமக்கு 
போட்டிடு பரிசம் !!!!
.
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #1
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

பாடியவர் : திப்புத்தோளார்

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...