குறுந்தொகை #6 எளிய வடிவில்
.
.
நட்ட நடு ஜாமத்திலே
வட்ட நிலா மறைந்திருக்க
அர்த்த ஜாமம் கிறங்கையிலே
அத்தனையும் உறங்கையிலே
நான் மட்டும் தனித்திருக்க
நள்ளிரவு துணையிருக்க
நாணமென்ன பாவமென்ன
நடைதளர்ந்து போனதென்ன
அத்தனையும் கிடைத்திருக்க
அவன் மட்டும் பிரிந்திருக்க
இல்லை இரக்கம் என்னிடத்திலே
இல்லை உறக்கம் என்னிடத்திலே
இனிநித்தம் விழித்திருப்பேன்
இன்முத்தம் அளித்திருப்பேன்
இதயத்தின் வாசல் திறந்திருக்கு
உதயத்தின் வரவை பார்த்திருக்கு..
.
.
#வாஞ்சிவரிகள்#
.
.
குறுந்தொகை #6
.
நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
.
பாடியவர்: பதுமனார்
No comments:
Post a Comment