குறுந்தொகை #9 எளிய வடிவில்
.
.
கார்மேக கருங்குழலி
கருங்குயிலின் குரலழகி
கருணையில் கடலவள்
பொறுமையில் புவியவள்
அன்பினில் உயர்ந்தவள்
பண்பினில் சிறந்தவள்
தலையறியா தனிப்பூவை
கலையழகு பெட்டகத்தில்
தனிமையிலே தாழிட்டு
புத்தகமாய் போனதுபோல்
உன்நினைவை உள்சுமந்து
உனக்காக உடலுருகி
உருவிழந்து உழல்கின்றாள்
.
காட்டாற்று வெள்ளத்தில்
கூட்டாக குறுமீன்கள்
பறந்த பசுந்தளிர் பரப்பி
விரிந்த நீராற்று படுகையிலே
கெட்டி காம்புடை நெய்தல்பூ
எட்டித் தலைதூக்கும்
குளிக்க வந்த கன்னியர்
களிப்புடனே கூடிப்பேசி
குளிர்ந்திடும் குளத்தில் மூழ்க
ஒளிர்ந்திடும் கயல்விழி போலே
குளிர்ந்த நாடுடை தலைவனால்
கரைந்த கண்ணீர் கதையெலாம்
மறைத்த மங்கை இவளன்றோ
.
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #9
.
யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே.
.
பாடியவர்: கயமனார்
No comments:
Post a Comment