Wednesday, May 31, 2017

குறுந்தொகை #5

குறுந்தொகை #5 எளிய வடிவில்
.
.
கடலில் பிறந்து
கரும்பாறையில் சிதைந்து
காற்றில் மிதந்து
கரையில் தவழ்ந்து
புன்னையில் விழுந்து
பூக்களை சொரிந்து   
கதிரவன் கதிர் நோக்கா
கருநிழல் பரப்பி
வானில் வட்டமாய்  
வெயிலில் வாட்டமாய்    
சேற்றில் புரண்டு
கரையில் திரிந்து  
களைத்த குருகை
உறங்க வைத்து
பெய்தல் மழையென
ஊரே உணர்ந்தனை   
நெய்தல் நாடான்
எனையே பிரிந்தனை
கடற்புற நேசன்    
வெளிப்புற தேசம் சென்றனை
சென்ற காட்சி கண்ணுள்ளே  
நின்ற தேனோ என்னுள்ளே   
கமலம் விரித்த கருமலர்கள்
கருமை தீட்டிய கருவிழிகள்
குளத்தில் துள்ளும் கயல்மீன்கள்    
உளத்தில் துள்ளும் கயல்விழிகள்
கருத்தவன் சாட்சி கன்னத்தில்
சிரித்தவன் செய்த குறும்பு அன்றோ
பெண்ணிமை தேடல் நிதமன்றோ
கண்ணிமை மூடல் கனமன்றோ
அம்மாடி இதுதான் காதலா
அடிபோடி நிதந்தான் சாதலா..
.
.
#வாஞ்சிவரிகள்#  
.
.
குறுந்தொகை #5
அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.

பாடியவர்: நரிவெரூஉத்தலையார்

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...