Wednesday, May 31, 2017

குறுந்தொகை #16

குறுந்தொகை #16 எளிய வடிவில்
.
.
பல்கலை படித்தாலும்
பலவித்தை அறிந்தாலும்
படிப்பிற்கோர் பணியில்லை
பாழாய் போன பாலையிலே
.
பெற்றவர் பிரிந்து
மனையாள் விடுத்து
வெளிநாடு சென்று
வெயிலில் காய்ந்து
மழையில் நனைந்து
பசியில் துவண்டு
பணம் சேர்க்க
பட்டிணம் போய்
பலநாள் ஆன என்
குலத் தலைவன்
பிரிந்தனையோ
எனை மறந்தனையோ
.
இந்நில கள்வர்
இடையில் சொருகும்
கூரிய அம்பை
நுனி நகத்தால்
தீட்டும் சத்தம்
செங்கால் பல்லி
தன்காதல் சொல்லி
அழைக்கும் ஓசையாய்
ஒலிக்க கேட்டு
உனையே நினைப்பான்
உன்னடி சேர்வான்
அழகு அடியுடைய
கமழும் கள்ளி
பறந்தே கிடக்கும்
மண்கடல் தேசத்து
மணாளன்!!!!
.
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #16
.
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.
.

பாடியவர்: சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...