Wednesday, May 31, 2017

குறுந்தொகை #7

குறுந்தொகை #7 எளிய வடிவில்
.
.
பாலை நிலத்துப் பறையோடு  
சோலை வனத்து துறையோடு
கூத்தர் தம் குடியோடு
கொஞ்சிக் குலவும் கும்மியது
அந்தரத்தில் வடம் ஏற்றி  
தந்திரமாய் தடம் தேடி   
சொட்டுகின்ற வியர்வையிலே  
கொட்டுகின்ற பறைச் சத்தம்
வாகை மரத்து வெண்ணெற்று
தோகை விரித்து அசைந்தாட
மூச்சுக்காற்றாய் அதன் சத்தம்
மூங்கில்க்கீற்றில் வரும் சந்தம்
.
.
மாமன் மகளை கைப்பிடிக்க  
காமமொன்றே காதல் என்று
கலைக்க துடிக்கும் கூட்டமொன்று
நிலைக்க பிடிக்கும் பெண்ணோடு
காக்க காண்டீபம் கையிலேந்தி
காலில் வளையம் தரித்தோன்
மெல்லிய பாதம் பதித்தோளை  
தெள்ளிய சிலம்புக் காலோடு
தெருவில் நடாத்தி போயினனே  
வழியில் பெரியோர் வாழ்த்தினரே   
இன்றும் நிலத்தில் நின்காதல்
என்றும் நிலைத்து நின்றிடுமே
.
.
#வாஞ்சிவரிகள்#
.

குறுந்தொகை #7
.
வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.


பாடியவர்:  பெரும்பதுமனார்

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...