Wednesday, May 31, 2017

குறுந்தொகை #3

குறுந்தொகை #3 எளிய வடிவில்

மலையரசி மடியில் தவழ்ந்து
ஈராறு ஆண்டிற்கொருமுறை பிறந்து  
கருங்காம்பு நுனியில் கவிழ்ந்து
குறிஞ்சிப்பூ பெற்றடுத்த தேசத்து
கொம்புத்தேன் களிப்போடு குடித்து
செம்புத் தோள் புடைத்த என் தலைவா !

நின்பால் கொண்ட நட்பு அளவிடற்கரியது
நினைப்பிற்கு அப்பால் நீண்டு நிற்கும்
நிலத்தினும் பெரிது
விஸ்வரூபம் எடுத்தாலும் விரிந்து கிடக்கும்
வானினும் உயர்ந்தது
பூமித்தாயின் அடியை தொட்டு உரசும்
பெருங்கடலின் பேராழத்தை விட பெரியது !!

#வாஞ்சிவரிகள்#


குறுந்தொகை 3, தேவகுலத்தார் , குறிஞ்சித் திணை - தலைவி சொன்னது

நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று,
நீரினும் ஆரளவின்றே , சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...