குறுந்தொகை #8 எளிய வடிவில்
.
.
வளமாய் விளையும் வயலும்
குளமாய் நிறைந்த குடியும்
செழித்து குலுங்கும் மாமரத்தில்
பழுத்து விழுந்த கனியை
நோகாமல் கவ்வும் வாளைமீன் கூட்டம்
போகாமல் பொய்யாய் சேர்ந்திடும் கூட்டம்
மா தென்னை கொஞ்சிடும் ஊரான்
மாதென்னை வஞ்சித்து வாரான்
.
என்னவெலாம் செய்தனை என்னில்
சொன்னதெலாம் புரிந்தாய் முன்னில்
ஆசையில் அணைத்தனை கட்டிலில்
நிராசையில் பிரிந்தனை இக்கட்டில்
பகலில் செய்வாய் சொல்வதை
இரவிலே செய்வாய் சொல்லாததை
.
புதல்வனின் தாயிடத்து இங்கே
முதல்வனின் வீரம் போனது எங்கே
ஆடி முன் ஆடிடும் பொம்மையோ
நாடி பின் போனது உண்மையோ
மைதீட்டிய மையலில் மயங்கியே
கைகட்டி நின்றனன் தயங்கியே.
.
.
#வாஞ்சிவரிகள்#
.
.
குறுந்தொகை #8
.
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.
No comments:
Post a Comment