Wednesday, May 31, 2017

குறுந்தொகை #15

குறுந்தொகை #15 எளிய வடிவில்
.
.
வைகறை எழுந்து
ஞாயிறு தொழுது
மண்குடம் சுமந்து
குளக்கரை போன-என்
குலவிளக்கை
கண்டனளோ உந்தன்
சின்னவளே
செப்பினளோ சேதி
உன்னிடத்தே
.
மெல்லிய இடை
துள்ளிய நடை
ஒலிக்கும் கைவளை
ஜொலிக்கும் சிலை
செதுக்கா ஓவியம்
சென்றனள் அவனொடு
.
காலில் கழலொடு
கையில் வேலொடு
செம்மை இலையொடு
செறிந்த மார்பினன்
பாலை நாடனொடு
மாலை சூடினள்
.
முதிர்ந்த தோர்
ஆலமரத்தடியில்
மூத்த கோசர்
குலத்தலைமையில்
முரசு முழங்க
சங்கு ஒலிக்க
நாட்டினர் வாழ்த்த
பூட்டினன் தாலி
அட்சதை தூவி
தட்டினர் கரவொலி
.
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #15
.
பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
.

பாடியவர்: ஔவையார்

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...