Wednesday, May 31, 2017

குறுந்தொகை #4

குறுந்தொகை #4 எளிய வடிவில்

நெஞ்சே ! நெஞ்சே !
நித்தம் உன் விரல் கொண்டு
என் சித்தம் சிலிர்ப்பாயே
கலங்கும் என் விழியை
விழுங்கும் உன் விழியால் துடைப்பாயே
நோகும் என் இதயத்தை
உரசும் உன் தேகத்தால் காப்பாயே !!
எங்கே ! எங்கே !
என் பிணி தீர்க்கும் உன் விரல்கள் எங்கே !
நெஞ்சம் தவிக்குதே
தேகம் கொதிக்குதே
கண்கள் பனிக்குதே
எப்போ நீ வருவாயோ
என் உயிர் தன்னை காப்பாயோ !!

#வாஞ்சிவரிகள்#

#4 குறுந்தொகை
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்

அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...