Wednesday, May 31, 2017

குறுந்தொகை #13

குறுந்தொகை #13 எளிய வடிவில்
.
.
அந்தி சாயும் நேரத்திலே
ஆசைமச்சான் ஓரத்திலே
உச்சிமலை பக்கத்திலே
உசிருரெண்டு தாபத்திலே
மாசுமறு நீக்கி வைக்க
பாகனவன் பட்ட பாட்டில்
பெருங்களிறு குளித்து நிற்கும்
அழகன்றோ இக் கரும்பாறை
கொட்டிவிட்ட கடும் மழையால்
தட்டிவிட்ட தூசெலாம்
துடைத்தெடுத்த தோற்றத்தில்
புடைத்தெழுந்த காமத்தில்
சொரசொரத்த பாறைமேல்
தோளுரித்த சாரைபோல்
சூளுரைக்கும் மலையன்
சூலுண்டேன் என்னுள்
.
ஜாமவேளை வந்தாலே
மாமனவன் நினைவாலே
காமநோயில் நானுழல
காணவில்லை காதலனே
குவளை மலர் கண்ணில்
திவளை யாயென் கண்ணீர்
பாசவலையில் சிக்கியே
பசலையில் நான்தவிக்க
எப்பத்தான் வருவானோ
இன்முத்தம் தருவானோ
.
.
#வாஞ்சிவரிகள்#
.
.
குறுந்தொகை #13
.
மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.
.

பாடியவர்: கபிலர்

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...