குறுந்தொகை #2 எளிய வடிவில்
துயில் சாயும் என் காந்தளே
மயில் தோகை உன் கூந்தலே
மயக்கும் அதன் நறுமணம் கண்டு
வியக்கும் எந்தன் மனம்
இயற்கை உனக்கீந்த இந்த மணம்
இணையுண்டோ எங்கேனும் நந்தவனம்
மகரந்த பொடிதனை நுகர்ந்து
சிறந்தது எதுவென அறிந்து
மலர்களின் மோகம் உனக்குண்டே
காதல் இளவலே என் கருவண்டே
உண்மைதனை உரைப்பாயோ
உலகெங்கேனும் கண்டீரோ என்
குலமங்கை கூந்தல் மணம்
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
குறுந்தொகை #2
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
No comments:
Post a Comment