Wednesday, May 31, 2017

குறுந்தொகை #10

குறுந்தொகை #10 எளிய வடிவில்
.
.
இல்லாளின் இனிமை மறந்து
நல்லாளின் நினைவை இழந்து
இல்லாத இன்பம் தேடி
பொல்லாத பரத்தை  நாடி
போனானே காஞ்சித் தலைவன்
வாரானே சாஞ்ச தலையோடு

சேர்த்திட்ட செல்வம் உன்னால்
சேர்ந்திட  நிப்பாள் பின்னால்
கஷ்டமாய் கணங்கள் வருநாள்  
இஷ்டமாய் இன்பம் தருவாள்  

கரிசல் காட்டோரம்
காஞ்சிப்பூ பூத்திருக்கு
கொடியிடையாள் இடை போலே
பொடிக்கிளையாய் வளைந்திருக்கு
நெத்தாக காய்த்திருக்கும் பயறுபோலே  
கொத்தாக பூத்திருக்கு கிளையின் மேலே
களைத்த கிழவரெலாம்
வளைத்தே விளையாட
மழையாகி கொட்டியது பூந்தாது  
சிலையாகி விட்டனரே தாங்காது  
களிப்புடனே காணுகின்ற காட்சியெலாம்
செழிப்புடனே சேர்ந்ததிந்த காஞ்சிநிலம்  

நித்தம் நீசெய்த நஞ்சுள்ளே   
நிக்காது அவளின் நெஞ்சுள்ளே  
வஞ்சித்தே சென்றிட்ட காஞ்சியனை
வாஞ்சையாய்  வரவேற்கும் வஞ்சியவள்
அவமதிக்காமல் அடைவாய் தஞ்சம்
தாமதிக்காமல் தருவாள் மஞ்சம்
.
#வாஞ்சிவரிகள்#
.
.
குறுந்தொகை #10
.
யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே.
.

பாடியவர்: ஓரம்போகியார்.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...