குறுந்தொகை #12 எளிய வடிவில்
.
.
இனிதே வாழ்ந்து
இன்பக்கடலில் நனைந்து
இழிசொல் அஞ்சி
இல்துணை விஞ்சி
இருப்பிடம் துறந்து
இரையது தேடி
கள்வர்கள் வாழும்
கடுநிலம் வழியே
கண்காணா தேசம்
கடந்தே போயினன்
.
வழியில் வளமில்லை
வாழும் தடமில்லை
தாகம் தணிக்க-நீர்
தேக்கம் தெண்படவில்லை
எறும்பின் வளையொத்த
அறும்பு சுனை நீரே
பருக பயனூறும்
பாலை நிலத்தூடே
.
செல்லும் வழியெலாம்
கொல்லும் வெயில் தொல்லை
கொல்லன் உலைக்களத்து
கொதிக்கும் பட்டடைக் கல்லாய்
தகிக்கும் கருங்கல் பாறையில்
தனுசேந்தும் வேடர்
தமதம்பை தீட்டிடுவர்
பாதை பலவாக பிரிந்தே
பயணம் பயமாகி விட்டதோ
.
எப்படி என்னவன் சென்றனை
எண்ணியே பெற்றனள் வேதனை
இதையறியா இவ்வூர் மக்களோ
எனையன்றோ ஏளனமாய் ஏசினர்
எதுவாயினும்
என் காதல் தலைவனவன்
தடையின்றி தளம்சேர
தாயம்மா துணை நிற்பாளே!!!!
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #12
.
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவர் சென்ற ஆறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.
.
பாடியவர்: ஓதலாந்தையார்
No comments:
Post a Comment