Wednesday, May 31, 2017

குறுந்தொகை #11

குறுந்தொகை #11 எளிய வடிவில்
.
.
துரத்தும் துயர் துடைக்க
தூரதேசம் தனித்தே சென்றனை
துக்கம் தாங்கியே தவித்திருக்க
தூக்கம் இன்றியே துடிக்கின்றேன்  
.
எங்கு சென்றாய் எனதுயிரே
இங்கு காண்பாய் என்துயரே
உன்பிரிவை பொழுதாய் நினைந்து
என்னுடலோ மெழுகாய் கரைந்து
அங்கமெலாம் அழுதே உழண்டு  
சங்குவளை விழுதே கழண்டு
.
வேற்படையுடைத்த கட்டி நாட்டின்
மேற்கே கொஞ்சம் எட்டி சென்றான்  
குல்லைப்பூவை சிரத்தில் சூடி
பாலை நிலத்தில் பரதம் ஆடி
சுந்தர தெலுங்காய் செம்மொழி பேசும்
வடுகர் நிலத்தில் வளமாய் வாழ்வான்  
.
ஊரும் மொழியும் வேறென்றாலும்
நீவிர் நிழலே நிம்மதியன்றோ
எத்தனை காலம் காத்திருப்பேனோ
பித்தனை போல பிரிந்திருப்பேனோ
சித்தம் கலங்கி சிணுங்காமல்  
நித்தம் நினைத்து வருந்தாமல்
என்னிடம் தேடிநீ வருதல் என்று
நின்னிடம் நாடி நகர்தல் நன்று
.
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #11
.
கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.
.

பாடியவர்: மாமூலனார்

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...