குறுந்தொகை #17 எளிய வடிவில்
.
.
கூந்தலில் கமழும்
காந்தளின் நறுமணம்
நெஞ்சினில் இன்னுமே
விஞ்சியே வீசுதே
மலைத்தேன் மங்கையே
மலைத்தேன் உன்னழகில்
விழுந்தேன் உன்நாவிலே
விழுந்தேன் வழுக்கியே
விழிச்சுவரில் உன்னுரு
விலகிட மறுக்குதே
உஷ்ணமாய் உன்சுவாசம்
உருகியே வழியுதே
உனையன்றி ஓர்வாழ்வை
உயிரென்றும் வெறுக்குதே
.
குறிஞ்சி நிலவே
பகலவன் மறைந்த
பௌர்ணமியில்
தரிசனம் காண
தவமிருக்கேன்
உனக்காக நான் இங்கே
காத்திருக்க
எனக்காக நீ அங்கே
மறைந்திருத்தல் நியாயமா
.
ஊரார் விரட்டிடினும்
உறவுகள் துரத்திடினும்
எருக்கு மாலையொடு
பனைக்குதிரையேறி
ஊர்கூடி வடம் பிடிக்க
தேர்போல ஊர்வலமாய்
தூற்றலுக்கு அஞ்சாமல்
துயர்கண்டு துஞ்சாமல்
மலையர் குல பெண்மையே
மணமுடிப்பேன் உன்னையே
.
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #17
.
மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே.
.
பாடியவர்: பேரெயின் முறுவலார்
No comments:
Post a Comment