Wednesday, May 31, 2017

குறுந்தொகை #14

குறுந்தொகை #14 எளிய வடிவில்
.
.
தேவதையே உன்நேசம்
தேடிவந்தேன் உன்தேசம்
கூடிவரும் வேளை
ஓடிவிட்ட கோழை
வருவேன் வாசல் மானே
தருவேன் தாரம் நானே
உரைமின் தோழி
கரையும் மனதை
.
தித்திக்கும் அமிழ்தம்
எத்திக்கும் இனிக்கும் செந்நா
முத்துப் பற்கள்
குத்தும் கூராய்
வெட்டும் என அஞ்சி
சொட்டும் சொல்-தேனாய்
கொட்டும் கொஞ்சி
.
எத்துயர் வரினும்
என்னுயிர் தேவிநீ
அத்துயர் முறித்தே
உன்னுயிர் அடைவேன்
.
சாம்பல் பூசி
எருக்கம் சூடி
உன்னுரு ஏந்தி
பனங்குதிரையில்
தோழர் வடம்பிடித்து
தெருவெலாம் ஊர்வலமாய்
பவனி வந்து மடலேறி
உன்கரம் பிடிப்பேன்
ஊருக்கு உரைப்பேன்
உண்மைக் காதல் இதுவென்று
உரைத்தல் கண்டு நாணமாய்
உயர்வாய் வாழ்வோம் மானமாய்
.
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #14
.
அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்
கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவன் இவனெனப்
பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே.
.

பாடியவர்: தொல்கபிலர்

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...