#131 கம்பன் எளிய தமிழில்
.
பதிப்பு 1:
.
சாவடி மண்டிய சாலைகளும்
பூமலை தூவிய தோரணமும்
பொன் செறிந்த மண்டபமும்
மலர் சொரிந்து மிளிர்ந்திடும்
.
கற்றவர் குழுமும் கூடங்களும்
மற்றவர் கூடும் மாடங்களும்
மன்னவர் போற்றும் மன்றங்களும்
வான்புகழ் பெற்ற மாடமாளிகைகள்
.
பளிங்கு பரப்பிய தளங்களும்
பளிச்சிடும் பவளத் தரைகளும்
குவிந்து ஒளிரும் குன்றுகளும்
ரத்தினம் விரித்த குட்டிமமும்
.
விருந்தினர் வியக்கும் வாசலும்
பெருமக்கள் புகழும் முற்றமும்
நித்திலம் நிறைந்த இடைகழிகள்
முத்துப்பந்தர் மூடிய முன்றில்கள்
.
குட்டிமம் - தரை
இடைகழி, முன்றில் - முற்றம்
.
#வாஞ்சிவரிகள்#
.
பொன் திணி மண்டபம் அல்ல. பூத்தொடர்
மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே.
#131 கம்பன் எளிய தமிழில்
.
பதிப்பு 2:
.
பொன்னிழைத்த மண்டபமில்லை பேரறைகளுமில்லை
பூமலை சொரிந்த மலர்ச்சாவடிகள்
மன்றங்களில்லை நான்மாடக் கூடங்களுமில்லை
வான்புகழ் எய்திய மாடமாளிகைகள்
குன்றுகளில்லை பளிங்குத் தளங்களுமில்லை
பவளமும் இரத்தினமும் இழைத்த குட்டிமங்கள்
முன்றில்களில்லை முகிலுரசும் முற்றங்களுமில்லை
நித்திலம் நிறைந்த முத்துப்பந்தராய் இடைகழிகள்
.
#வாஞ்சிவரிகள்#
.
குட்டிமம் - தரை
இடைகழி, முன்றில் - முற்றம்
.
பொன் திணி மண்டபம் அல்ல. பூத்தொடர்
மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே.
No comments:
Post a Comment