#147 கம்பன் எளிய தமிழில்
.
கரிப்பிழம்பொளியாய் ஒளிரும் விழியுடை
அரியும் இரைதேடி இடைசிறுத்த சிம்மமும்
வகையாய் பிண்ணிப் பிணைந்து களிப்புற
குகையால் சூழ்ந்த மலைகள் உடைத்தது
.
குன்றென வளர்ந்த கரிமலைக் களிறுகள்
கன்னம் கை கோசமாம் மும்மதத்து மதநீர்
மண்ணில் விழுந்து மழையாய் பொழிய
தண்ணீர் கரைத்து ஆழமும் சகதியுமாகி
வடம் பிடித்து வழிசெல் வலிய ரதங்களும்
தடம் பதித்து மண்சேற்றில் புதையுண்ணும்
.
#வாஞ்சிவரிகள்#
.
தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை கிரி நிகர் களிற்றின் மும் மத
மழை விழும்; விழும்தொறும். மண்ணும் கீழ் உறக்
குழை விழும்; அதில் விழும். கொடித் திண் தேர்களே.
No comments:
Post a Comment