#172 கம்பன் எளிய தமிழில்
.
இல்லையென இரப்போர் கடலென வரினும்
இல்லையென கூறாது ஈந்தே கடந்தான்
.
எண்ணம் சிறக்கும் அறிவெனும் கடலை
எண்ணிலா நுண்நூல் ஆய்ந்தே கடந்தான்
.
பகைவர்கள் சூழ்ந்து கடலென வரினும்
பகைவரை படையொடு வாள் கொண்டு கடந்தான்
.
திருவின் வளத்தால் தொடரும் பேரின்பக் கடலை
கருத்து முற்றத் துய்த்தே கடந்தான்
.
ஈகையில் சிறந்து கல்வியில் தேர்ந்து
வீரத்தில் மிகுந்து மனநிறைவோடு வாழ்பவனென
கோசலம் போற்றிப் புகழும் மாமன்னன் தயரதன்
.
#வாஞ்சிவரிகள்#
.
ஈந்தே கடந்தான். இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான். அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான். பகை வேலை; கருத்து முற்றத்
தேய்ந்தே கடந்தான். திருவின் தொடர் போக பௌவம்.
கடைசி வரியில் "தோய்ந்தே கடந்தான்" அல்லவா சரியாக இருக்கும்?
ReplyDelete