Thursday, November 2, 2017

#167 கம்பன் எளிய தமிழில்

#167 கம்பன் எளிய தமிழில்
.
வித்தான கல்வி விதையாக முளைத்து எழுந்து
முத்தாக மேலோங்கி மரமாய் செழித்து வளர்ந்து
எண்ணற்ற நூல் கேட்டு ஞானம் பெருகி
எண்ணமெலாம் விழுதாய் விரிந்த விருட்சமாய்
அருந்தவமும் நற்குணமும் நகரெலாம் நிறைந்து
மருந்தெனவே கிளையெலாம் இலைகள் தழைத்து
அன்பெனும் அருங்குணமே அரும்பாக முகிழ்த்து
பண்பெனும் நல்லறமே மலராக மலர்ந்து
போகமெனும் பேரின்பம் பழமாய் கனிந்து
போகமாய் பொலிந்து விளங்கும் அயோத்தி
.
போகம் - இன்பம், விளைச்சல்
.
அந்தாதியாக!!!!!
.
கல்வியால் வரும் அடக்கம்
அடக்கத்தால் கிடைக்கும் நல்வாழ்வு
நல்வாழ்வினால் சேரும் பொருள்
பொருளால் செய்ய முடிந்த தருமம்
தருமத்தால் கிடைக்கும் போகம்
போகத்தால் பொலிவான அயோத்தி
.
#வாஞ்சிவரிகள்#
.
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து. எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கு. அருந் தவத்தின்
சாகம் தழைத்து. அன்பு அரும்பு. தருமம் மலர்ந்து.

போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...