#141 கம்பன் எளிய தமிழில்
.
மகளிர் மேனி
.
நாணத்தில் விரிந்த கரும்பிறைப் புருவமும்
நாண்பூட்டி வரிவிழும் வானவில் நெற்றியும்
கொய்யாக் கன்னமும் கோவை இதழும்
பொய்யா மொழியும் பொலிவுடை முகமும்
செம்பஞ்சூட்டிய செதுக்கிய கால்களும்
வெம்பிஞ்சு விரல்களும் பிறர் பழிக்க அஞ்சும்
தாமரை இதழொத்த பொற்பாதம் கொண்டு
மாமனை ஊடலில் ஊமையாய் உதைத்திடவே
போர்க்களம் பலகண்ட வலிவுடைத் தோள்களும்
வார்த்திடும் சிவந்த வலியற்ற வரிகளாய்
.
#வாஞ்சிவரிகள்#
.
குதை வரிச் சிலைநுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதயுகத் தொழில்கொடு. பழிப்பு இலாதன
ததை மலர்த் தாமரை அன்ன தாளினால்.
உதைபடச் சிவப்பன. உரவுத் தோள்களே.
No comments:
Post a Comment