#156
சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன. மகளிர் வாள் முகம்;
வாளிகள் அன்னவை மலர்வ; மற்று அவை.
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே.
விண்ணைத் துளைக்கும் மாளிகைகள்
வான்மேகம் பிணிக்கும் கோபுரங்கள்
தோரணம் அலங்கரிக்கும் மாடங்கள்
ஆரணங்கின் ஒளிமிகு முகங்கள் பட்டு
மலர்ந்து பொலிவனவாகும்
மலர் முகம் தொடுக்கும் கயல்விழி அம்புகள்
சிங்கம் ஒத்த ஆடவர் மார்பு தொலைத்ததங்கே
No comments:
Post a Comment