Thursday, November 2, 2017

#159 கம்பன் எளிய தமிழில்

#159 கம்பன் எளிய தமிழில்
.
பிளிறி முழங்கும் மதமிகு வலிவுடை
களிறின் பிடரியில் வலிமையால் ஏறி
நகரின் நான்மாட வீதியில் வலமாய்
நகர்ந்தங்கு உற்சாக உலா சென்றும்
.
புடைத்தெழும் புரவி பூட்டிய ரதம்தனில்
புடைசூழும் புரவலர் புகழுரை எழுப்ப  
படைபயின்று தோளுடைத்த வீரரும்
நடைபயின்று ஊரினில் ஊர்ந்து சென்றும்
.
துன்பம் தோய்ந்து வறுமையில் வருவோரை
இன்முகம் கொண்டு இருகரம் இணைத்து
இன்னல் அகற்றி இனிதே வாழ்ந்திட
பொன்னும் பொருளும் வாரி வழங்கியும்
.
பொழுதுபோக்கும் இளைஞரும் இறைவனை
தொழுது போற்றும் இளவரசரும் நிறைந்த நகரம்  
.
#வாஞ்சிவரிகள்#
.
முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும்.
எழும் குரத்து இவளொடு இரதம் ஏறவும்.
பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர

வழங்கவும். பொழுது போம் - சிலர்க்கு. அம்மாநகர்.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...