குறுந்தொகை #25 எளிய வடிவில்
.
.
நட்டநடு சாமத்தில்
ஒட்டுப்பாறை ஓரத்தில்
நான்மட்டும் தனித்திருக்க
மாமனோடு இனித்திருக்க
ஊதாப்பூ சேலையில்
மாராப்பு மறைத்திருக்க
பட்டுவண்ண ரவிக்கையில்
சிட்டுமனம் தவிக்கையில்
.
ஊரெல்லாம் உறங்கையில்
உசுரு ரெண்டு கிறங்கையில்
சொக்கி நிக்கும் வேளையில்
கொக்கி போட்டு இழுத்தியே
முகம் சிவக்கும் முந்தியே
வாக்கு ஒன்னு தந்தியே
முடிஞ்சு வச்ச முந்தியே
நெஞ்சு அடிச்ச தந்தியே
.
கை விடக் கெஞ்சியும்
கைவிடேனென சொல்லியே
உறுதிமொழி அளித்தெனை
உலகை மறக்க வைத்தாயே
தவளைச்சத்தம் கேட்கையில்
தலைவனோடு வேட்கையில்
தவசுக் காதல் கலைந்தது
தனுசு அச்சு முறிந்தது
.
களவு செய்து சென்ற என்
கள்வன் எங்கும் காணோமே
காட்சி கண்ணில் தெரிந்துமே
சாட்சியின்றி தவிக்கிறேன்
.
ஓடுகின்ற நதியிலே
நாடி வந்த நாரையது
அடித்தினை குறுத்தாய்
நெடித்த ஒரு காலாய்
பிடித்து உண்ண ஆரலை
ஒதுங்கி நிற்க ஆவலாய்
நேரில் நின்ற சாட்சியது
ஊரில் எவரும் கேட்டால்
உதவ வருமா குருகதுவும்
உள்ளம் மருகுதே ஓயாமல்
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #25
.
யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
.
பாடியவர்: கபிலர்
No comments:
Post a Comment