#143 கம்பன் எளிய தமிழில்
.
தாமரைப் பூவில் தவழும் திருமகள்
தங்கியருளும் அயோத்தி மாளிகையின்
இருளகற்றி ஒளிபரப்பும் தீபத்தின் ஒளிவிளக்கு
சுடரொளி செறிந்து அழியா ஒளிரும் நெய்விளக்கோ
கதிர்திரள் பொழியும் மாடத்து மணிவிளக்கோ அல்ல
செழிப்புடை சருமம் சிறப்புறப் பேணி
களிப்புடை மிளிரும் மங்கையரின் மேனி ஒளியே
.
#வாஞ்சிவரிகள்#
.
தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பில் நின்று இருள் துரப்பன.
திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
மணி விளக்கு: அல்லன் மகளிர் மேனியே.
No comments:
Post a Comment