Thursday, November 2, 2017

குறுந்தொகை #24

குறுந்தொகை #24 எளிய வடிவில்
.
.
வசந்த வனத்தினிலே
உசந்து நிக்குமிந்த  
கசந்த மரத்தின்
கருத்த கிளையில்
வேப்பம்பூ பூத்திருக்கு
வெப்பமும் தணிந்திருக்கு
உந்தனை பார்க்காது
என்னுயிர் உறங்காது
உன்துணை இல்லாது
ஊணினி இறங்காது
சித்தம் சிதைந்திருக்கு
பித்தம் பிடித்திருக்கு
உத்தமன் உன்னுருவை
நித்தமென் நெஞ்சினில்
புத்தகமாய் பூட்டிவைத்து
புனிதமாய் பூஜைசெய்து
பக்கமாய் அதைப்புரட்டி
ஏக்கமாய் வாழுகின்றேன்
இளவேனில் முடியுமுன்னே
விரைந்தே வந்துவிடு
இளவலே நின் துணையோடு
கானகத்து காட்சியெலாம்
களிப்புடனே கண்டிடலாம்  
.
வெள்ளாற்றங்கரையிலே
விளைந்திருக்கும் மரத்திலே  
வெளுத்திருக்கும் கிளையிலே
பழுத்திருக்கு அத்தியே
.
வளைந்தடித்த காற்றிலே
விழுந்ததொரு பழத்தினை  
விழுங்க வந்த நண்டுகள்
மிதித்து குழப்பி பிளிந்து
கலங்கடித்த காட்சிபோல்
வேலன் வரவை எதிர்பார்த்து
தவமிருக்கும் எனைப்பார்த்து
கொடுந்தேள் கொண்டையர்
கடுஞ்சொல் கொண்டெனை
அலர் கூறி இழித்ததால்
அல்லல் உற்று அழுகிறேன்
.
நிம்மதி தொலைத்து
உன்வழி பார்த்து
நிற்கதியாய் நிற்கிறேன்
வானத்தில் மின்னும்
விண்மீன்களை எண்ணி
வீண்காலம் கழிக்கிறேன்
காரியம் முன்முடித்து
துரிதே விரைந்துவந்து
துயர் துடைப்பாயா!!!!
.

குறுந்தொகை #24
.
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென் றவ்வே.
.

பாடியவர்: பரணர்

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...