#139 கம்பன் எளிய வடிவில்
.
காலைக்கதிரவன் கணைதொடுக்க
சோலைப்பூக்களில் பசலை படர
பூ வாசமதைத் தென்றலிடம் தூதனுப்ப
தேடிவந்த காதல் கருவண்டு தேன்குடிக்க
மடிதிறந்து மடலணைக்கும் மலர் கண்டு
தனிமையில் வாழும் தன்னிலைதனை
பொருளீட்ட புறம் சென்ற தலைவனிடம்
தூது சொல்ல வழியறியா வருத்தத்தில்
தனமது தாளா மெல்லிடை வளைய
தினமது எண்ணி மனமது வாடும் தலைவி
.
#வாஞ்சிவரிகள்#
.
பொழிவன சோலைகள் புதிய தேன் சில;
விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
நுழைவன; அன்னவை நுழைய. நோவொடு
குழைவன. பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையோ.
No comments:
Post a Comment