#154 கம்பன் எளிய தமிழில்
.
பதிப்பு : 1
.
மன்னாதி மன்னன் குடையில் குறுநில
மன்னரும் சிற்றரசு கூட்டமும்
பொன்னும் பொருளும் கப்பமாய் கட்ட
மலையாய் குவித்து அளந்து அடுக்க
கலையாய் கட்டிய கருவறைகளும்
.
அன்னம் போல நடை நடந்து
வண்ண வண்ண உடை தரித்து
மன்னவர் மயங்கும் நடன மாதர்
செதுக்கிய சிற்பமாய் சிலையின் உருவாய்
சிற்றிடை வளைத்து சக்கரமாய் சதிராட
ஆடிப் பாடி கூடி மகிழும் நாட்டிய கூடங்களும்
.
நான்மறை வேதம் நயம்பட பயின்று
வான்புகழ் தேவரும் விருப்புடன் வினவும்
வல்லமை பெற்ற வேத வித்தகர்கள்
உள்ளம் உருகி உமையனை வேண்டி
வேதங்கள் ஓதும் பஜனை மடங்களும்
.
ஒட்டிப் பேசும் அறிஞரும்
வெட்டிப் பேசும் வல்லுனரும் கூடும்
பட்டி மண்டபம் பலவற்றை
கட்டி வைத்து கலைபோற்றும் அயோத்தி
.
#வாஞ்சிவரிகள்#
.
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்.
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்.
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்.
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம்.
#154 கம்பன் எளிய தமிழில்
.
பதிப்பு : 2
.
மண்டபம்..!
மன்னர் அமர்ந்து ஆட்சி செய்ய
மணி மண்டபம்..!
குறுநில மன்னர் கப்பம் அளக்க
கருவறை மண்டபம்..!
நடன மாதர் நாட்டியம் ஆட
நாட்டிய மண்டபம்..!
வேதம் பயின்றோர் ஓதிப் புகழ
பஜனை மண்டபம்..!
பல்கலை முனைவர் வாதம் செய்ய
விவாத மண்டபம்..!
அறிஞரும் ஆய்வாளரும் ஆராய்ச்சி செய்ய
ஆய்வு மண்டபம்..!
வழிப்போக்கர் தங்கி ஓய்வெடுக்க
ஓய்வு மண்டபம்..!
கல்வி கற்போர் கூடி கற்க
கல்வி மண்டபம்..!
திருமணம் திருவிழா நடத்தி மகிழ
திருமண மண்டபம்..!
என மண்டபமாய் மண்டிக் கிடக்கும்
மாநகரம் நம் அயோத்தி..!!
.
#வாஞ்சிவரிகள்#
.
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்.
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்.
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்.
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம்.
No comments:
Post a Comment