Thursday, November 2, 2017

குறுந்தொகை #28

குறுந்தொகை #28

மேகக்கூட்டம் கூடினால்
தேகமெங்கும் கூசுதே
குயில்கள் சேர்ந்து கூவினால்
துயிலில் சோகம் ஆகுதே
தென்றல் என்னை தீண்டினால்
கண்கள் பனியாய் போகுதே  
சாமம் நெருங்கி வந்தாலே
காம நோயால் சருமம் வாடுதே

வாடும் எந்தன் வதனம்
தேடும் உன்னை அனுதினம்
யாரும் என்னை தேற்றாமல்
ஊரும் உறங்கி கிடக்குதே  
என்ன சொல்லி நானழுவேன்
எங்க போயி முட்டிக்கொள்வேன்
காணாது போனவனைச் சொல்வதா
பேணாது உறங்குவாரைக் கொல்வதா
போலியாய் காரணம் சொல்லி
ஆவென்றும் ஒல்லென்றும் கூச்சலிட்டு
ஓவென்று தூங்குவோரை எழுப்புவதா
என்ன செய்வதென தெரியலையே
எப்படி உரைப்பதென புரியலையே
என்னவனை தேடிக் கொண்டுவந்து
மன்னவனாய் ஆக்க வேண்டுமென்று
என் நலம் காக்கும் என்குலத்து மக்களிடம்
எங்ஙனம் உரைப்பதென தெரியலையே
மூலப்பாடல் :

முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...