#177 கம்பன் எளிய தமிழில்
.
இழைத்த வயிரம்
பிணைத்த அணிகலன்
தரித்த அங்கம்
புடைத்த சிங்கமவன்
மன்னுயிர் அனைத்தும்
தன்னுயிராய் நினைத்து
சிரம் தாழ்ந்து
கரம் கோர்த்து
குலம் போற்ற
குடி காப்பதால்
குணம் நிறைந்து
சினம் குறைந்து
சுற்றம் காக்கும்
குற்றமற்ற இப்பேருலகில்
நின்று வாழும் உயிர்களும்
சென்று வாழும் உயிரினமும்
நிலையாய் விரும்பி
நிறைவாய் வாழ்ந்து
பெருமை பாடியே
அடைக்கலம் தேடிடும்
அன்பின் கூடென் றாயினன்
.
#வாஞ்சிவரிகள்#
.
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்.
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால்.
செயிர் இலா உலகினில். சென்று. நின்று. வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான்.
No comments:
Post a Comment