கனவில் வந்து தொல்லை கொடுக்கும்
காதலனை நினைத்து தலைவி தோழியிடம்
சொல்லி குறைபட்டாலும் உள்ளத்தில் அவனை
நினைத்து ஆனந்தம் அடைகிறாள். எளிய தமிழில்
உங்களுக்காக இதோ.....
.
குறுந்தொகை #30
.
கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி
கேளடி என் கனவை தோழி
வாழடி நீயும் பல்லாண்டு
நள்ளிரவில் நான் உறங்கையிலே
அள்ளி அணைத்தன அவன் கைகளடி
துள்ளி எழுந்து பார்க்கையிலே
தள்ளி மறைந்து போனானடி
பொய்யான கனவு கூட
மெய்யென தோன்றுதடி
மெய்யெங்கும் சிலிர்த்ததடி
செய்யாத குறும்பெலாம்
மெய்யாக இருக்குமென்று
பொய்யாக அவன் மடிமீது
மெய்மறந்து கிடந்தேனடி
கட்டிலில் அவன் உறங்கிடவே
கட்டியவனை அணைத்திடவே
உறக்கம் கலைந்து எழுந்தேனடி
உண்மை அறிந்து வியந்தேனடி
தொட்டுத் தழுவி மகிழ்ந்ததெலாம்
கட்டிலில் விரித்த படுக்கையடி
.
வண்டுகள் விழுந்து
தண்டுகள் முறிந்து
மடல்கள் மடிந்து
உடல் வருத்திய குவளை போல்
தேசம் விடுத்துப் போனவன்
நேசம் நினைத்து
கேசம் கலைந்து
தேகம் மெலிந்து
சோகம் ஆனேனடி தோழி
மோசம் போனேனடி
.
#வாஞ்சிவரிகள்#
.
கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே.
பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார்
No comments:
Post a Comment