#10 கம்பன் எளிய தமிழில்
.
வையகம் போற்றும் வானுயர் ராமன்
கைத்தலம் பற்றிய கயல்விழி சீதை
மெய்நிகர் காதை மாமுனி மூவர்
மூத்தவர் முனைந்த மூத்த காவியம்
வானவர் வாழ்த்தும் வான்மீகம்
வசியம் செய்யும் வாக்கியம்
வசிட்டர் வழங்கிய யோக வசிட்டம்
பெரும்புலவர் போதாயனர் புனைந்த - செங்
கரும்பினும் இனிய சம்புஇராமாயணம்
.
இம்முப்பெறும் படைப்பினில் இனிதாம்
ஆதிகவி வான்மீகி அருளிய
அருங்கவி காப்பியமே என்
கவிச் சக்கரவர்த்தி கட்டிய
கவிச் சரித்திரத்தின் கருவானது
.
சீருடன் கட்டமைந்த சீரும்
நேருடன் ஒட்டிவந்த நிரையும்
பண்பாட்டை விளக்கும் பாட்டு
வெண்பாவாய் நல் விருந்தாய்
நீண்டதை நயமாய் நறுக்கி
விண்டதை வியக்க விரித்து
காட்சிதனை நேரில் கண்டு
மாட்சிதனை போற்றும் மனதில்
செறிந்த கவிதையாய் சொரிந்து
விரிந்த விந்தை விருத்தமாய்
சிறந்த இலக்கிய சிந்தையிலே
பிறந்ததிந்த இராமகாவியம் பூமியிலே
.
.
பாடல் #10
.
தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும். முந்திய
நாவினான் உரையின்படி. நான்தமிழ்ப்
பாவினால் இது உணர்த்தியபண்புஅரோ.
No comments:
Post a Comment