#87 கம்பன் எளிய தமிழில்
விழாவும் வேள்வியும்
பாதிப்பு 1:
குரல்நாதம் இசைக்கும் பாடகரும்
குழல்நாதம் இசைக்கும் கலைஞரும்
தனித் தனியே தெருவில் நின்று
தனி ஆவர்த்தனம் வாசிக்க
திரளென திரண்டு நின்று
திருவிழா காணும் மக்கள்
உறவோடு உரசி நின்று
மணவிழா காணும் சொந்தம்
வழிந்தோடும் இருநதிகள்
வழியறுத்து கலந்தது போல்
குழுமிய கோசலர் கூட்டம்
விழுமியே பூண்ட விழாக்கோலம்
பாதிப்பு 2:
கவி பாடும் பாணரும்
குழலூதும் கவிஞரும்
தனித் தனியே வாசிக்க
திரளென திரண்டு வந்து
திருவிழா காணும் கூட்டம்
உறவோடு உரசி நின்று
மணவிழா காணும் சொந்தம்
வழிந்தோடும் இருநதிகள்
வழியறுத்து கலந்தது போல்
குழுமிய கோசலர்
விழுமிய விழாக்கோலம்
#வாஞ்சிவரிகள்#
விழுமிய - செழித்த
கூறு பாடலும். குழலின் பாடலும்.
வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்.
‘ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்’ என.
சாறும் வேள்வியும் தலைமயங்குமே.
No comments:
Post a Comment