#6 கம்பன் எளிய தமிழில்
.
பேரண்டம் பழித்தாலும்-என்
பேர் சொல்லி இழித்தாலும்
.
பார் போற்றும் ராமன் கதை
ஊர் அறிய உரைத்தாலே
.
மாசற்ற மதியோடு-மன
தூசற்ற தூயோனின்
.
ஒப்பற்ற கவியோடு
ஒப்பிட்டு பார்த்திடுவர்-அதன்
.
தொன்மையும் பெருமையும்
வண்மையும் வளமையும்
.
மென்மையும் மேன்மையும்
உண்மையும் உலகறியும்
.
#வாஞ்சிவரிகள்#
.
பாயிரம் #6
.
வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது எனின்,
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே.
No comments:
Post a Comment