Wednesday, August 2, 2017

#80 கம்பன் எளிய தமிழில்

#80 கம்பன் எளிய தமிழில்


சோலைக்குயில் பாடுவது
சேலைக்கிளி கேட்டுத்தான்
தோகை மயில் ஆடுவது
கோதைநடை பார்த்துத்தான்
முத்து மணி உதிர்வது உன்
முத்துநகை கோர்த்துத்தான்


#வாஞ்சிவரிகள்#


மூலப்பாடல்:
கோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன; கிளர் இள வளையின்

நாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம்.

#80 கம்பன் கவிதையில் பிறந்த பாட்டு
ஏதேனும் சினிமா பாடல் ஞாபகம் வருகிறதா??

சோலைக்குயில் பாடுவது
சேலைக்கிளி கேட்டுத்தான்
      என்நாதமும் சங்கீதமும்
      உன்னோடு பாடத்தான்..!
தோகை மயில் ஆடுவது
கோதைநடை பார்த்துத்தான்
      என்பாதமும் உற்சாகமும்
      உன்னோடு ஆடத்தான்..!
முத்து மணி உதிர்வது உன்
முத்துநகை கோர்த்துத்தான்
       என்வாசமும் சந்தோசமும்

       உன்னோடு வாழத்தான்..!


No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...