Wednesday, August 2, 2017

#50 கம்பன் எளிய தமிழில்

#50 கம்பன் எளிய தமிழில்

ஆளும் முறை அறிந்து
நாளும் ஆசை அகற்றி
குணம் கொண்டோரைப் போற்றி
சினப் படும் நேரம் சினந்து
வருவாய் அறிந்து வரியிட்டு
குருவாய் இருந்து குடி காக்கும்
திருவாய் அரசன் அமைந்ததால்
வறுமைச் சுமைகள் நீங்கி
சிறுமை சினங்கள் தவிர்த்து
தெய்வத் தன்மை பொருந்திய
நெய்தல் நிலமாய் அமைந்தது
கடல் வழியே சுமந்து வந்த
மடல் விரித்த கப்பல்கள்
புகழ்மிகு பொன்னின் பாரத்தை
எழில்மிகு கோசலையின்
தொழில்மிகு கடற்கரையில்
பதமாக இறக்கி வைத்து
இதமாக முதுகினை ஆற்றிக் கொள்ளும்

#வாஞ்சிவரிகள்#

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...