#49 கம்பன் எளிய தமிழில்
முள்தண்டுத் தாமரையின்
வெள்ளி நுனி உடைய
பிதுக்கி வைத்த முத்து
ஒதுக்கித் தள்ளி ஓட
நிலத்தில் உள்ள பொன்னும்
விலக்கிக் கொண்டு போக
குவித்து வைத்த மணிகள்
கவிழ்ந்து கீழே சிந்த
சலஞ்சலத்துச் சங்கு
சங்கடமாய் புலம்ப
கொழுமுனையில் புரலும்
புழுமண்ணின் திரளில்
வயல் கண்ட மீன்கள்
பயம் கொண்டு பாய
அஞ்சி நின்ற ஆமை
எஞ்சியுள்ள கால், தலையை
ஓட்டுக்குள் சுருக்க
நுகத்தடியில் விழும் வராலும்
மதகடியில் மறைய
உழுகின்ற எருதினை
இழுக்கின்ற உழவர்
நிறைந்துள்ள நாடு -நான்
மறை போற்றும் இக் கோசல நாடு !!!
#வாஞ்சிவரிகள்#
No comments:
Post a Comment