Wednesday, August 2, 2017

#7 கம்பன் எளிய தமிழில்

#7 கம்பன் எளிய தமிழில்
.
சந்தநயம் தோய்ந்த சிந்தடி விருத்தங்கள்
வசந்த மயமான சாஸ்திர வேதங்கள்
.
கேட்டு மகிழ்ந்த சான்றோர் செவிகளென்
பாட்டு கேட்டினி பழுதாகிடுமோ
.
சொல்லிசை கேளிசை ஞானமின்றி
சொல்லாடல் செய்திட யான் விழைந்தேன்
.
எண்ணத்தில் எழும் என் கவிதை
வண்டிசை தேடும் இசையறி விலங்கு
சங்கீத ஞானம் சகலமுமுணர்ந்த
சிங்கார அசுணத்தின் செவியில்
.
யாழ்இசை மீட்டி மகிழ்வித்து பின்
பாழ்பறை கொட்டி உயிர்பிரித்தாற் போல்
.
சப்தஸ்வரம் ஒலித்த காதினிலென்
அபஸ்வரம் ஒலித்திடப் போகிறது
.
.
பாயிரம் #7
.
துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்

பறை அடுத்தது போலும்என் பாஅரோ.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...