#20 கம்பன் எளிய தமிழில்
.
பாடல் #20
.
மலை மேல் மோதி
நிலைக் கல் நொறுக்கி
மரக் கிளை முறித்து
வேரதைப் பிடுங்கி வீழ்த்தி
இலை தழை ஏந்தி
அலை கடல் அடைத்து
அணை கட்ட முனைந்த-வானர
சேனை கூட்டம் போல்
கூரிய அம்பாய் குவிந்து
சீறி பாய்ந்தது சரயு
.
#வாஞ்சிவரிகள்#
.
மலை எடுத்து. மரங்கள் பறித்து. மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்.
அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீக்கம் - அந் நீத்தமே.
No comments:
Post a Comment