#65 கம்பன் எளிய தமிழில்
மண்ணுள் புதைந்த கிழங்கெடுக்க
கண்ணில் கண்ட நவமணியை
விட்டு எறியும் கோசலர்கள்
எட்டி நின்ற மாமரத்தில்
பட்டு சிதைந்த மாங்கனிகள்
சொட்டும் சாறு தரை நனைக்க
புன்னை பூக்கள் பூத்து விழ
பொன்னாய் மின்னும் மருத நிலம்
மலர்த்தாது மண் மறைக்க
மலர் மஞ்சம் மலர்ந்திடவே
முளரியில் முண்டித் திரியும் அன்னம்
கிளறிக் கிறங்கி துயில் கொள்ளும்
No comments:
Post a Comment