#8 கம்பன் எளிய தமிழில்
.
பித்தர் பேதையர்
பத்தர் இம்மூவர்
.
சித்தம் சிதைந்தவரே
நித்தம் நினைவற்று
.
தத்தம் போக்கினிலே
சத்தம் விளைவிப்பவரே
.
புத்தகப் புழுவான
உத்தம புலவரும்
.
முறையொடு தேர்ச்சியுற்று
மறையொடு வாழ்கின்ற
.
முத்தமிழ் கவிஞருக்கு
இத்தமிழ் கண்டு சிலிர்க்க
.
சிறப்பேதுமில்லை ஆராய
உயர்வேதுமில்லை
.
தரம் குன்றி தந்திருந்தால்
சிரம் தாழ்த்தி
கரம் கூப்பி வணங்குகிறேன்
வரம் தந்து வாழ்த்திடுவீர்
.
.
பாயிரம் #8
.
முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்:
‘பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?’
No comments:
Post a Comment