#9 கம்பன் எளிய தமிழில்
.
கனவுலகில் சஞ்சரித்து
நனவுலகில் தனை மறந்து
கடற்கரையில் மணல் குவித்து
கடுந்தரையில் கரிக் கோலமிட்டு
மனக்கண்ணில் மாடமாளிகை கட்டி
மணிக்கணக்கில் மகிழ்ந்தாடும்
மணிச்சிறுவர் குணம் மடமை எனினும்
கல்லை கரைத்து சிதையை சிதைத்து
சில்லாய் உடைத்து சிலையாய் வடிக்கும்
சிற்பியர் தம் சினம் தவிர்த்து
சிறாரை பாராட்டி சீராட்டுவர்
.
சிறிதளவும் தெளிவின்றி
கடுகளவும் கவிநயமின்றி
எள்ளளவும் புலமைத்திறமின்றி
உள்ளளவில் உதித்தமை போற்றி
உன்னத உயர்வதில் சேர்த்து
எண்ணத்தில் எழுந்த நற்றிறம் கூட்டி
அன்பெனும் நறவம் மாற்றிய கவிப்பித்தன்
பண்புடன் படைத்த இப்புதினமதை
.
அறப்படியே கல்விபெற்று
நெறிப்படியே தேர்ச்சி பெற்று
நன்நூலறிவால் பகுத்தறியும்
இந்நிலவாழ் மாமேதையர்
இச்செந்நூல் ஈந்த இப்பேதையை
எந்நாளும் பழித்தலின்றி போற்றுவர்
.
.
பாடல் #9
.
அறையும் ஆடரங்கும் மடப்பிள்ளைகள்
தறையில் கீறிடின். தச்சரும்காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன்கவி.
முறையின் நூல் உணர்ந்தாரும். முனிவரோ?
No comments:
Post a Comment