Wednesday, August 2, 2017

#53 கம்பன் எளிய தமிழில்

#53 கம்பன் எளிய தமிழில்

முக்காலம் துறந்து
எக்காலம் போற்றும்
முனிகளும் விரும்பும்
கனிகளில் சிறந்த
கழனியில் கனிந்த
முக்கனிகளும்
பலரும் ருசிக்கும்
பல்சுவைப் பருப்பும்
வெண்பசு ஈன்ற
வெண்ணுரைப் பாலை
சுருங்கக் காய்ச்சி
உருக்கிய நெய்யை
இலையினில் ஊற்ற
மூழ்கிடும் உணவும்
கருநிற எருமை
அருந்தயிர் கட்டியும்
கண்ட செருக்கரை இடை இடை
கொண்டு செறிந்த சோறும்
தத்தம் வீட்டினில்
நித்தம் விருந்தினர்
கற்றார் தம்மொடு
உற்றார் உறவினர்
தேவாதி தேவர் உண்ட
தேவாமுதம் தனை
பகிர்ந்து உண்டு
மகிழ்ந்து வாழும்
ஆரவாரம் உடையது
இந்த கோசலம்!!

#வாஞ்சிவரிகள்#

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...