#52 கம்பன் எளிய தமிழில்
நிலமவள் நஞ்சை
புலம்தனில் விளைந்து
கதிரினில் கனிந்து
உதிரும் நெல்மணியும்
மணங்கமழ் தடாகத்தில்
மணம் வீசும் வெண்தாமரையும்
முதிர் பயன் மரத்தினில்
உதிர் கனி காயும்
முத்தான முல்லை ஈனும்
சத்தான பருப்பு வகையும்
பதித்த கொடியில் படர்ந்து
உதித்த மலரும் காயும்
எருநிலத்து குழிதனில்
வரும் பெரும் கிழங்கும்
தேன் உண்ணும் வண்டு
தேன்மலர் தேடி
தேன் சேர்த்து வந்து
தேன்கூடு கட்டுதல் போல்
உழுதுண்டு வாழும்
உழவர் பெருமக்கள்
உயிர்தனைக் கொடுத்து
பயிர் தம்மை விளைத்து
களமெலாம் நிறைந்து
உளமெலாம் குளிர்ந்து
வளமெலாம் கொள்வர் !!!
#வாஞ்சிவரிகள்#
No comments:
Post a Comment