#83 கம்பன் எளிய தமிழில்
பூமலர் சூடிய பூங்குழலோடு
முத்தாரம் தழுவும் மார்போடு
மாலைப்பொழுதின் மயக்கத்தில்
சோலைவனத்தில் பவனி வரும்
கோதையர் பேரெழில் கண்டு
போதையில் மிதக்கும் ஆடவர் போல
பெண்மயில் சாயலில் பேதையர் காண
போனது பின்னே தோகைமயிலும்
இடம் கொள் சாயல் கண்டு. இளைஞர் சிந்தைபோல்.
தடங் கொள் சோலைவாய். மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே
No comments:
Post a Comment