#51 கம்பன் எளிய தமிழில்
நாளாய் உழைத்த கழனியில்
ஆளாய் வளர்ந்த நெல்மணி
வாளால் அரிந்த நெல்லரியின்
தாளாச் சுமையை தலைதூக்கி
வரப்பின் வழியே வலம் வந்து
பரப்பியே வைத்திடும் களத்தினில்
குன்றென குவித்திடும் போர்தனை
முன்னரே குறியிட்ட இடந்தனில்
பத்திரமாய் காவல் காக்க
நித்தமுமே நிலையாய் நின்றிருப்பர்
கதிரவன் வருமுன்னே
கதிர்தனை உதிர்க்க
கல்லினில் அடித்து
நெல்லினைக் குவிப்பர்
வேண்டி நிற்கும் ஏழைகட்கு
வேண்டியதை தானமிட்டு
எஞ்சி நிற்கும் தானியத்தை
தஞ்சமென வருவோருக்கும்
கொஞ்சி வரும் குலத்தோர்க்கும்
கஞ்சி காய்ச்சி கொடுத்திடவே
போகும் பாதை புதைய
நோகும் நிலமும் நெளிய
வண்டியில் மூட்டை கட்டி
கொண்டு போய் வீடு சேர்ப்பர்
#வாஞ்சிவரிகள்#
No comments:
Post a Comment