#71 கம்பன் எளிய தமிழில்
வழி தவறா வாழும் பொன்னாட்டில்
வழி தவறி ஓடுவது சரயுவெள்ளமே
நெறி கெட்டு நடவாதார் நன்னாட்டில்
குறி கெட்டது தோளிலுள்ள குங்குமமே
பெருமை நிறைந்தோர் பெருநாட்டில்
சிறுமை சிறுநங்கை சிற்றிடையே
குணம் குன்றா குலமுடை கோசலநாட்டில்
மணம் உடைத்து மங்கையின் பூங்குழலே
#வாஞ்சிவரிகள்#
நெறி கடந்து பறந்தன. நீத்தமே;
குறி அழிந்தன. குங்குமத் தோள்களே;
சிறிய. மங்கையர் தேயும் மருங்குலே;
வெறியவும். அவர் மென் மலர்க் கூந்தலே.
No comments:
Post a Comment