Wednesday, August 2, 2017

#46~48 கம்பன் எளிய வடிவில்

#46~48 கம்பன் எளிய வடிவில்

பத்தும் பொருந்திய
பத்தரை மாத்து
பத்தினி பார்த்து மண
பந்தத்தில் கோர்த்து
களிப்புறுவாரும்
தன் நிழல் தூக்கி
விண்வெளி பறக்கும்
பருந்தினைப் போல
இயல் இசைத்த
இசையில் மயங்குவாரும்
அமிழ்தினும் இனிய
நன்னூல் அறிவினை
செவிதனில் மடுத்து
செழிப்புறுவாரும்
விருந்துண்டு வியக்கும்
விருந்தினர் முகம்கண்டு
விருந்தோம்பல் விரும்பி
வாழ்ந்திடுவோரும்

சினம் மிகு மனமும்
சினங்கொண்ட சேவல்
கண்ணினும் சிவந்த
செங்கொண்டை காட்டி
முன்பகை இல்லா
கண்பகை கொண்டு
கத்திக்காலுடன்
சுத்தித் துரத்தும்
வாட்போர் புரிய
வெறுப்பேதுமின்றி
வீர வாழ்க்கையில்
மாசேதும் வரினும்
தன்னுயிர் மறந்து
களத்தினில் இறங்கி
எதிரியைத் தாக்கும்
சேவலைப் போரிட
செய்திடுவோரும்

பெண்ணெருமை ஈன்ற
செங்கண் கன்றிரண்டு
கோபங்கொண்ட இருட்பிழம்பு
பாய்ந்து வந்து மோதுதல் போல்
வேகம் கொண்டு மோதிடவே
திரண்டு நிற்கும் மக்களின்
ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்
கூந்தலில் சூடிய மலரில்
கிறங்கிக் கிடந்த வண்டுகள்
மிறண்டெழுந்து பறந்தன

#வாஞ்சிவரிகள்#

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...