#44 கம்பன் எளிய தமிழில்
வடிவம் 1:
கயல் விழிக் கண்களோடு
வயல் வெளியில் வண்ணநடை பயிலும்
மங்கை பதித்த மென்பாதம் போல்
செங்கல் மிதித்த செங்கால் அன்னம்
இரை தேடும் இளங்குஞ்சினை
கரை ஓரம் காட்சியாய் பூத்திருக்கும்
அழகு தாமரை அமைந்த படுக்கையில்
நிழலாட உறங்க வைக்க
ஆற்றில் குளித்த அசதியோடு
சேற்றில் நடக்கும் செழித்த எருமைகள்
கன்றை நினைத்து கணைக்கவும்
தன்னை மறந்து தன் மடிதனில்
சுரந்து வடியும் சுத்தப் பாலினை
நிரந்து குடிக்கும் நிறைய குஞ்சுகள்
அடுத்திருக்கும் பச்சைத்தேரையும்
படுத்துறங்க தாலாட்டு பாடிடும்
#வாஞ்சிவரிகள்#
வடிவம் 2:
.
கன்றை நினைத்து
சேற்றில் நடக்கும்
கோசலத்து எருமைகள்
தன்னை மறந்து
மடியில் சுரந்து
தரை நனைக்கும் பாலை
.
செம்மண் சேற்றில்
கூடித் திரியும்
செங்கால் அன்னம்
கயல்விழியாளின்
எழில் நடை போல
பெண்ண நடை பயின்று
.
இளங்குஞ்சுகளுக்கு
பகிர்ந்து பாலூட்டி
படர்ந்து கிடக்கும்
அடர் தாமரை
மலர் படுக்கையில்
உறங்க வைக்க
பச்சைத் தேரைகள்
பாடித் தாலாட்டும்
காட்சி காணும் நிலம்
எம் மருத நிலம் !!!!
.
#வாஞ்சிவரிகள்#
.
பிகு: பெண்ணின் நடை அன்ன நடை நாம் அறிந்தது
இங்கே அன்ன நடை பெண்ணின் நடை போன்றதாக கம்பர் சொல்கிறார். பெண்ண நடை எனது
No comments:
Post a Comment